“ பங்கயத்திற்கு“ ஐந்தும் பெண்பிள்ளைகள் அவளின் கணவர் “ சுந்தரம் “ பொறுப்பில்லாதவர் முத்தமகள் சுமதி குடும்பச்சுமையை ஏற்கத்தொடங்கினாள் சுந்தரம் உழைக்கும் பணத்தை எல்லாம் குடித்து அழித்திடுவான் அவன் உழைக்கும் பணம் தன் செலவுக்கே போதாது வரவு பத்து என்றால் செலவு நாற்பது.
ஒரு நாள் சுந்தரம் குடிபோதையில் மிதந்து வந்தான் மனைவி பங்கயத்தை பார்த்து ஏ......ய் பங்கயம் என் ஆசைபங்கயமே என் செல்லக்கிழியே என்று கூப்பிட்டவாறு வீட்டுக்குள் நுழைந்தான்.
“சுந்தரம்;“இன்று என்னடி சமயல் என்றான். பங்கயத்திற்கு கோபம் வந்தது மனதிற்குள் புலம்பினாள். வயது வந்தபெண் வேலை தேடி அலைகின்றாள்.
வீட்டில் இருக்கும் பெண்கள் பசியில் வாடுகின்றார்கள். பொறுப்பில்லாத உனை சிந்திக்கவா பெற்றெடுத்த ஐந்தையும்சிந்திக்கவா..
என்று தன்மனதை வாட்டியபடி இன்று சமையல் இல்லை என்றாள். சுந்தரம் என்ன…..என்ன… இன்று சமையல் இல்லையா என்று கேட்டபடி சடார்.. என்று பங்கயத்தின் கன்னத்தில் அறைந்தான்.
அவளின் கன்னம் சிவந்தன.
மகள் சுமதிக்கு கோபம் வந்தது அவள் மீண்டும் வேலை தேட ஆரம்பித்தாள்.
எங்கும் வேலை இல்லை அடுத்தஊருக்கு புறப்பட்டாள் வேலை தேடினாள் ஒரு கம்பனியில் வேலை கிடைத்தது அவள் எதிர் பார்த்த சம்பளம் கிடைத்தது.
அவள் குடும்பம் பசியில் இருந்து மீட்க்கப்பட்டார்கள்.
சுமதியை வரம் கேட்டு ஒருவர் வந்தார் அவருக்கு வயது ஐம்பது உங்கள் மகளை நான் திருமணம் செய்வதற்கு ஆசைப்படுகின்றேன்.
எனது செத்துக்கள் எல்லாவற்ரையும் உங்கள் மகளுக்கே தருகின்றேன் என்றார். இருவரும் சிந்தித்தார்கள் சுமதியின் காலத்தை சிந்திக்கவில்லை அடுத்த பெண்களைசிந்தித்தார்கள் சம்மதம் தெரிவித்தார்கள. சுமதி கம்பனி லீவுக்கு வீடு திரும்பினாள். அங்குதிருமணம் பேசிமுடித்ததை கேட்டதும் யார் என்று தெரியாமல் மனதில் சந்தோசம் அடைந்தாள.;
தாய் அவரின் புகைப்படத்தை காட்டினாள் அவளின் மனக்கோட்டை இடிந்தது. “ அம்மா“ என்று கதறினாள.; திருமணத்தை மறுத்தாள்.
அம்மா இவர் யார் தெரியுமா…? இவர் எங்கள் கம்பனி முதலாலி இவருக்குவயது ஐம்பதுஎன்றாள்.
தெரியும் சுமதிஎல்லாம் தெரியும்.
தெரிந்துமா…
சம்மதம் தெரிவித்தீர்கள் என்று கதறினாள்:
சுமதி கொஞ்சம் சிந்தித்துப்பார் உனது நான்கு சகோதரிகளையும் எப்படிகரைசேர்க்கமுடியும்.
“ அம்மா “ சொத்துக்கு எனை விற்றுவிட்டாயா…உன் என்னப்படி செய்து முடி என்று அமர்ந்து கொண்டாள்.
திருமணம் நிறை வேறியது எல்லோரும் அவளின் வீட்டுக்கு புறப்பட்டுவட்டார்கள். காலம் கடந்தது ஒருநாள் சுமதியின் கணவர் மாரடைப்பில் இறந்து விட்டார்.
சுமதியின் வாழ்கை பட்டமரம் போல் ஆகிவிட்டது.
சிந்தித்தாள் பயணத்தை தொடங்கினாள் தன் சகோதரிகளுக்க திருமணத்தை முடித்தாள். மிகுதிசொத்தை எல்லாம் ஆசிரமத்திற்கு கொடுத்து விட்டு தன் பெற்றோரிடன் புறப்பட்டாள் வயோதிப...இல்லம் நோக்கி சேவை செய்வதற்க்காக.
அன்புடன் ராகினி.
Thursday, February 16, 2006
சிறகொடிந்த பறவை
சில்லென்றகுளிர் காற்றில் மெல்லென சிரித்தபடி சூரியன் உதிக்க கமலாநித்திரைவிட்டு எழுந்தாள். தன் தலையை வாரி முடிந்தபடி அம்மா ….வாணி…. எழுந்திடு எழுந்திடு வாணி எழுந்திடு என்று செல்லமாக எழுப்பினால் தாய் கமலா.
வாணி அம்மா…பிலீ…ஸ் கொஞ்சநேரம் உறங்கலாமா என்று சினுங்கியபடி போர்வைக்குள் மீண்டும் புகுர்ந்து கொண்டாள்.
“கமலா“ வாணி… உனக்கு இன்று பரீட்சை அல்லவா எழும்பு வாணி..எழும்பு என்று கூறிய படி கமலா முற்றத்திற்கு வந்தாள்.
காலைத் தெண்றல் அவள் கன்னத்தை தட்டிச்செல்ல.
மனதில் ஓர் உற்சாகம் தோண்றியது கமலாவுக்கு.
முற்றத்தை கூட்டி அழகிய கோலமிட்டாள் ’’கமலா’’ வாணி; “அம்மா…அம்மா…என்ன’’ சத்தமிட்டாள்.
தாய்கமலா என்னம்மா ஏன் காலையில் இப்படி சத்தம்போடுகின்றாய் என்றாள்.
அம்மா.. எனக்கு தேணீர் வேண்டும் என்றாள் வாணி .
இதற்கா இப்படி சத்தமிட்டாய் என்று கேட்டபடி குசினிக்குள் நுழைந்தாள் அடுப்பைப்பற்ரவைத்து தேணீர் தாயார் செய்து மகள் வாணிக்கு கொடுத்துவிட்டு தன் கணவர் மதனை எழுப்பினாள் என்னங்க…என்னங்க மணி ஆறாச்சுது எழுந்திடுங்க வேலைக்கு நேரமாச்சு என்றாள் கமலா . “ மதன்’’ அவசரஅவசரமாக எழுந்து குளித்து விட்டு வேலைக்கு தயாரானார் மகள் வாணி தயங்கின படி அ..ப்பா…. நா….னும் உங்களுடன் வரலாமா…. என்றாள் .
தந்தை மதன் என்ன இன்று புதிதாக இருக்கின்றது இ..ல்..லை தினம் பஸ்சில் போக போறடிக்குது அப்பா அ..துதா…ன் சரி…சரி சீக்கிரம் புறப்படு என்றாh.; ’கமலா’ இருவருக்கும் சாப்பாட்டை கையில் கொடுத்து வழி அனுப்பி வைத்தாள்.
வாணியை பாடசாலையில் இறக்கிவிட்டு மதன் வேலைக்கு புறப்பட்டார் .வாணி பாடசாலைக்குள் நுலைந்தாள் ஏ….ய் வாணி குட்மேனிங் வாணியின் தோழி நிசாவின் குரல.; கா….ய் நிசா குட்மோனிங் நலமா..? என்று இருவரும் நலம் விசாரித்தபடி வகுப்பறைக்குச்சென்றார்கள்.
வாணி இன்று கவிதை போட்டியல்லா என்றாள் சசி. ஆமாம் சசி பயமாக உள்ளது உனக்கு பயம் என்றால் நாங்கள் எப்படியடி பயமில்லாமல் இருக்கமுடியும் என்றாள் சசி. இல்லை….எது எழுதுவதென்று புரியவில்லை.
வகுப்புக்குள் ஆசிரியர் வந்தார் மாணவர்கள் எழுந்து குட்மோனிங் சார்எனக்கூற குட்மோனிங் குட்மோனிங் எல்லோரும் உற்காருங்கள் என்றார் ஆசிரியர். எல்லோரும் உற்கார்ந்தார்கள்.
“ஆசிரியர்“ கவிதைப்போட்டிக்கு எல்லோரும் தயார்தானே .....கவிதைப்போட்டி அரம்பித்தது.
ஒவ்வொருவராக கவிதையை வாசிக்கத்தொடங்கினார்கள் அடுத்ததாக வாணியை அழைத்தார் ஆசிரியர் வாணி எழுந்து நின்று தன்கவிதையை வாசித்தாள்.
எல்லோரும் மிகுந்த பாறாட்டு வளங்கினார்கள்அவளுக்கே பரிசும் கிடைத்தது. முகம் மலர மிகமகிழ்ச்சியுடன் வீடு திரும்பினாள் வாணி .
தாயை இறுக்கி அனைத்தபடி அம்மா…..அம்மா…இன்று எனக்குத்தான் முதல் பரிசு கிடைத்தது எனக்கு எவ்வளவு சந்தோசமாக உள்ளது அம்மா.. என்றாள் வாணி தாய்கமலா தன்மகளின் கன்னத்தில் முத்தமிட்டபடி வாழ்த்துக்கள் கூறினாள்.தந்தை மதனும் வாழ்தைதெரிவித்தார்.
மறுநாள் காலை அவளின் கவிதை பத்திரிகையில் வெளிவந்தது உலகமே அவளின் கவிதையை ரசித்தது. அவள் கவிதை வாணியாக மாறினாள் பல ரசிகர் கூட்டம் அவளை சுற்றி வட்டமிட்டது.
காலம் கடந்தது விதி..யாரை விட்டது. வாணியையும் சுற்றிக்கொண்டது“றாம் எ…என்…னை தெரியல. நீ.....நீ....ரவி தானே ஆமாம் நான் ரவிதான் டேய் எப்படியடா இருக்கிறாய் ம்…இருக்கிறன் டேய் மச்சான் எப்படி வெளிநாட்டுவாழ்கை.பறவாய் இல்லை சரி றாம் நீ.. எப்படி.. எனது வேலையுடன் போகுதுகாலம்.
சரிடா.மச்சான் நீ….எப்ப மீண்டும் கனடா செல்கின்றாய்…? என்னும் ஒருமாதம் உள்ளது என்றான் ரவி. இருவரும் உல்லாசமக உரையாடிக் கொண்டு இருந்தார்கள் . “வாணி பஸ்தரிப்பிடத்தை நோக்கிவந்தாள்’’ றா…ம் யார்….? இவள்..யார்….? என்றான் ரவி. .. இவள் பெயர் வாணி நன்றாக கவிதை எழுதுவாள் இவளின் கவிதைகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன என்றான்.. றாம்.
சரிடா…..எனக்கு நேரமாச்சு பின்பு சந்திப்போம் என்று கூறி புறப்பட்டான் ரவி. ரவி வீட்டுக்குவந்து சோபாவில் உற்கார்ந்தான் . மனதுக்குள் புலம்பினான் “வாணீ சுவீட்நேம்“ நாளை மீண்டும் பார்போ….மா… என விடியலை நேக்கி காத்திருந்தான். கடிகாரம் சத்தம் போட்டது மணி ஆறை காட்டியது அவசரஅவசரமாக உடையை மாட்டிக்கொண்டு பஸ் தரிப்பிடத்தை நோக்கி புறப்பட்டான் அங்கு வாணி பஸ்சிற்க்காக காத்திருந்தாள்.
“ஹலோ வாணி உங்களுக்கு என்னை தெரியாது ஆனால் எனக்கு உங்களைதெரியும.; என்றான் ரவி .
வாணி சற்று திகைத்தாள்…யார் இவன்…?
நான்….உங்கள் ரசிகை என்றான் ரவி.
இருவரும் உரையாடிக் கொண்டார்கள் தினம் சந்திக்க தொடங்கினார்கள் சந்திப்பு காதலாகமாறியது.உல்லாசமாக திரிந்தார்கள்.
ரவி .வாணியிடம் கேட்டான். எப்போ நமது திருமணம் என்றான் வாணி.தயங்கிபடி எனை வீட்டில் வந்து பெண் கேட்கலாமே…என்றாள்.
ரவி. என்ன வீட்டுக்கு வந்து பெண் கேட்பதா அப்போ என் மேல் உனக்கு நம்பிக்கை இல்லையா வாணி .
இ….ல்லை..அப்பா அம்மாவுக்கு நான் ஓரேஒரு மகள் அவர்கள் மனதை துண்புறுத்தக்கூடது அதுதா…ன் என வாணி கூறினாள்.
ரவி கோபத்தோடு வீடு சென்றான்.“மனதுக்குள் புலம்பினான்“ வாணி உன் வீட்டில் சம்மதம் தெரிவிப்பார்களா எனத் தெரியவில்லை. கண்டிப்பாக நம் திருமணம் உன் ஆசைப்படி நடக்கும் நான் போகும் போது உனை அழைத்துக்கொண்டு செல்வேன். கண்டிப்பாக உன் வீட்டுக்குவருவேன் உனை என் மனைவியாக்கிவிட.என தனக்குள்ளே கூறிக்கொண்டான்.
“வாணி சிந்திக்க தொடங்கினாள் ’
என்ன செய்வது என்று புரியாதவளாக தடுமாறினாள் ரவி எங்கிருந்து வந்தீர்கள் எனை ஏன் சந்தித்தீர்கள் உங்களை பிரியமுடியவில்லை.. என்னால் என்று புலம்பிபடி உறக்கத்துக்கு சென்றாள.; வாணி…
மறு நாள் காலை அவள் மீண்டும் வேலைக்கு செல்ல பஸ்சிற்காக காத்திருந்தாள் ஆனால் அவள்மனம் தன் காதலை தேடியது.
எங்கே……?என் ரவி எங்கே….?
என அவள் மனம் போறாடத்தொடங்கியது.
ரவி என்னும் உங்கள் கோபம் போகவில்லையா…?
அங்கும் இங்குமாக அவள் கண்கள் அவனை தேடிக்கொண்டது.அவன் வரவில்லை. ஆனால் பஸ் வந்து நிண்றது அவளரிகில்.
அவள் பஸ்சில் ஏறி உற்காந்தாள் பஸ் புறப்பட்டது .ஆ….னா….ள் அவள் மனம் அமைதியில்லை.யன்னல் ஓரமாக எட்டி எட்டிப்பார்த்தபடி நின்றாள் .
பஸ் சந்தியை கடந்தது .
அவள் கண்ணில் நீர் சொருக அமர்தாள் வாணி. அப்போ... அவள் காதில் ஒருபாடல் ஒலித்தது.
அவள் இதயம் துடித்துக்கொண்டது.
அவள் இறங்கும் இடம் வர பஸ்சில் இருந்து இறங்கி வேலை இடத்துக்கு சென்றுவிட்டாள். அன்று அவளால் வேலை செய்யமுடியவில்லை. ரவி என்மனதை....... நீ..யறிய மாட்டாயா..?
’சிந்தித்தாள்’
தன் மனதில் இருந்தவற்ரை கவிதைகளாள் வரைந்தாள் ”என் பிரிய ரவிக்கு ”
வான் வெளியில் கவிபாட காதலுக்கு காவல் இல்லை
உன் நீ..தியும் நேர்மையும் பேசும் போது உனை உறவாடும் நாயகி ஆ..னேன் சிந்தையும் செயலும் ஒன்றானதால் உன்பாசப்பார்வையில் கடவுளை கண்டேன். காலம் பகைத்தாலும் ஊர் நமை கேலி செய்தாலும் உனை பிரியேன் நான் என்றும் ஜென்ம ஜென்மம் நம்காதல் ஒன்று சேரகருனை உள்ள உன் நெஞ்சில் குடியிருப்பாள் இவள் என்றும்.
என தன் மனதில் இருந்தவற்ரை கவிதையாக்கி கவரில் இட்டாள் வாணி.
கடிகாரத்தை பார்த்தாள் மணி நான்;கு காட்டியது வேலை முடிந்து வெளியில் வந்தாள். வாணி… ரவி காத்திருப்பதை கண்டாள்.
கதறினான் ரவி ”வா.....ணி......வாணி.......எனக்கதறினான்.’’ ரவி....ரவி.... உங்களை விட்டு பிரிகின்றேன் ரவி....என.வாணி.. தன் கையில் இருந்த கவரை அவன் கையில் கொடுத்தபடி.அவன் மடியிலேயே தன் உயிர் நீத்தாள் வாணி...........ரவியின் வாழ்கை திசை மாறியது.