
எனக்குப் பிடித்த பழைய பாடல்களை எனது கவிதைகளுடன் கேட்க கீழ்வரும் இணைப்புகளை அழுத்துங்கள்... [NEW]
என்றும் இனியவை-1
என்றும் இனியவை-2
இசையும் கதை கவிதைகள் சிறுகதை என் குரலில் கேட்க இங்கே.அழுத்தவும்
http://clearblogs.com/piriyaa/
சுமதி எங்கே செல்கின்றாள்?
“ பங்கயத்திற்கு“ ஐந்தும் பெண்பிள்ளைகள்
அவளின் கணவர்
“ சுந்தரம் “ பொறுப்பில்லாதவர்
முத்தமகள் சுமதி குடும்பச்சுமையை ஏற்கத்தொடங்கினாள்
சுந்தரம் உழைக்கும் பணத்தை எல்லாம் குடித்து அழித்திடுவான்
அவன் உழைக்கும் பணம் தன் செலவுக்கே போதாது வரவு பத்து என்றால் செலவு நாற்பது.
ஒரு நாள் சுந்தரம் குடிபோதையில் மிதந்து வந்தான்
மனைவி பங்கயத்தை பார்த்து ஏ......ய் பங்கயம் என் ஆசைபங்கயமே என் செல்லக்கிழியே என்று கூப்பிட்டவாறு வீட்டுக்குள் நுழைந்தான்.
“சுந்தரம்;“இன்று என்னடி சமயல் என்றான்.
பங்கயத்திற்கு கோபம் வந்தது
மனதிற்குள் புலம்பினாள்.
வயது வந்தபெண் வேலை தேடி அலைகின்றாள்.
வீட்டில் இருக்கும் பெண்கள் பசியில் வாடுகின்றார்கள்.
பொறுப்பில்லாத உனை சிந்திக்கவா பெற்றெடுத்த ஐந்தையும்சிந்திக்கவா..
என்று தன்மனதை வாட்டியபடி இன்று சமையல் இல்லை என்றாள்.
சுந்தரம் என்ன…..என்ன… இன்று சமையல் இல்லையா என்று கேட்டபடி சடார்.. என்று பங்கயத்தின் கன்னத்தில் அறைந்தான்.
அவளின் கன்னம் சிவந்தன.
மகள் சுமதிக்கு கோபம் வந்தது அவள் மீண்டும் வேலை தேட ஆரம்பித்தாள்.
எங்கும் வேலை இல்லை அடுத்தஊருக்கு புறப்பட்டாள் வேலை தேடினாள் ஒரு கம்பனியில் வேலை கிடைத்தது அவள் எதிர்
பார்த்த சம்பளம் கிடைத்தது.
அவள் குடும்பம் பசியில் இருந்து மீட்க்கப்பட்டார்கள்.
சுமதியை வரம் கேட்டு ஒருவர் வந்தார் அவருக்கு வயது ஐம்பது உங்கள் மகளை நான் திருமணம் செய்வதற்கு ஆசைப்படுகின்றேன்.
எனது செத்துக்கள் எல்லாவற்ரையும் உங்கள் மகளுக்கே தருகின்றேன் என்றார்.
இருவரும் சிந்தித்தார்கள் சுமதியின் காலத்தை சிந்திக்கவில்லை அடுத்த பெண்களைசிந்தித்தார்கள் சம்மதம் தெரிவித்தார்கள.
சுமதி கம்பனி லீவுக்கு வீடு திரும்பினாள்.
அங்குதிருமணம் பேசிமுடித்ததை கேட்டதும் யார் என்று தெரியாமல்
மனதில் சந்தோசம் அடைந்தாள.;
தாய் அவரின் புகைப்படத்தை காட்டினாள் அவளின் மனக்கோட்டை இடிந்தது.
“ அம்மா“ என்று கதறினாள.;
திருமணத்தை மறுத்தாள்.
அம்மா இவர் யார் தெரியுமா…? இவர் எங்கள் கம்பனி முதலாலி இவருக்குவயது ஐம்பதுஎன்றாள்.
தெரியும் சுமதிஎல்லாம் தெரியும்.
தெரிந்துமா…
சம்மதம் தெரிவித்தீர்கள் என்று கதறினாள்:
சுமதி கொஞ்சம் சிந்தித்துப்பார் உனது நான்கு சகோதரிகளையும் எப்படிகரைசேர்க்கமுடியும்.
“ அம்மா “ சொத்துக்கு எனை விற்றுவிட்டாயா…உன் என்னப்படி செய்து முடி என்று அமர்ந்து கொண்டாள்.
திருமணம் நிறை வேறியது எல்லோரும் அவளின் வீட்டுக்கு புறப்பட்டுவட்டார்கள்.
காலம் கடந்தது ஒருநாள் சுமதியின் கணவர் மாரடைப்பில் இறந்து விட்டார்.
சுமதியின் வாழ்கை பட்டமரம் போல் ஆகிவிட்டது.
சிந்தித்தாள் பயணத்தை தொடங்கினாள் தன் சகோதரிகளுக்க திருமணத்தை முடித்தாள்.
மிகுதிசொத்தை எல்லாம் ஆசிரமத்திற்கு கொடுத்து விட்டு தன் பெற்றோரிடன் புறப்பட்டாள் வயோதிப...இல்லம் நோக்கி சேவை செய்வதற்க்காக.
அன்புடன்
ராகினி.
3 comments:
ராகினி அவர்களே,
இன்றுதான் உங்கள் வலைப்பதிவைப் படிக்கிறேன். அனைத்தும் அருமையாக உள்ளது. எப்படி இவ்வளவு வலைப்பதிவுகளை பராமரிக்கிறீர்கள்?
தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துகள்.
முத்தமிழ்மன்றத்திற்கும் வருகை தாருங்கள்.
www.muthamilmantram.com
நன்றி முத்தமிழ்மன்றத்திற்கு கண்டிப்பா வருகை தருவேன்.
உங்கள் வலைப்பதிவிற்க்கு
எழுதுவதில் ஆர்வம் உண்டு என்பதால் பராமாக்கின்றேன்.
அன்புடன்
ராகினி.
சுமதி எங்கே செல்கின்றாள்?
அக்கம் பக்கத்து வீடுகளில்
இன்றும் தொடரும் இழி நிலை இது..
கண்டுகொள்ள மறுக்கும்
இய ந்திர தனமான இதயங்களுக்கிடையே....
உங்கள் கதை....
என்னை உங்கள் தோழனாக ஏற்றுக் கொள்ள மாட்டீர்களா?
என ஏங்க செய்கிறது...
தோழியே.
Post a Comment